• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள்

August 1, 2022 தண்டோரா குழு

கடந்த 55 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 56-வது கூடைப்பந்து போட்டிகள் வரும் 2022 ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெறுகின்றது.

இதுகுறித்து பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபால கிருஷ்ணன், பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப், தலைவர் டாக்டர். ருத்ரமூர்த்தி மற்றும் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள்

இவ்வாண்டு 56-வது ஆண்கள் பி.எஸ்.ஜி. கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் வரும் ஆகஸ்டு 3 – ம் தேதி முதல் 7 – ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இதில் அகில இந்திய அளவில் மிகச்சிறந்த 8 ஆண்கள் அணி தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு முதல் மூன்று நாட்கள் சூழல் முறையிலும். பின்பு ஒவ்வொரு முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் அறையிறுதிக்கு தகுதி பெறும் அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடுவார்கள்.

பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அணியில் பஞ்சாப் போலீஸ் அணி – பஞ்சாப், இந்திய கப்பல் படை அணி – லோனாவாலா, இந்தியன் வங்கி அணி – சென்னை, ஸ்போர்ட்ஸ் ஹால்டல் அஃப் எக்ஸலன்ஸ் அணி – சென்னை, ஒருங்கிணைந்த ரயில்வே தொழிற்சாலை அணி (ஐசிஎஃப்) – சென்னை, கேரளா மாநில மின்சார வாரிய அணி – கேரளா, கேரளா போலீஸ் அணி – கேரளா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா – பெங்களூரு ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

வெற்றி பெறுகின்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000.00 மற்றும் பிஎஸ்ஜி சுழல் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50,000.00 மற்றும் கோப்பை, அரையிறுதிப் போட்டியில் மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூ.20,000.00 மற்றும் நான்காம் இடம் பெறும் அணிக்கு 15,000.00 மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10,000.00 பரிசாக வழங்கப்படும்.

போட்டிகள் வரும் 03.08.2012 முதல் தினமும் மாலை 5 மணிக்கு துவங்கும். இப்போட்டிகளை பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் டாக்டர். ருத்ரமூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைக்கிறார். பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் டாக்டர். கே. பிரகாசம் முன்னிலை வகிக்கிறார்.

ஆகஸ்டு 7 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி. சமீரன், பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபால கிருஷ்ணன், சி.ஆர்.ஐ பம்ப் நிறுவனங்களின் இணை நிர்வாக இயக்குனரும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவருமான ஜி. செல்வராஜ், பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் டாக்டர். ருத்ரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்க உள்ளார்கள்.

மேலும் படிக்க