August 2, 2022 தண்டோரா குழு
எஸ்.என்.எஸ்.கல்வி குழுமங்கள் சார்பாக மாநில அளவிலான ஜூனியர் அத்லெட்டிக் போட்டிகள் கோவையில் துவங்கியது..இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
எஸ்.என்.எஸ்.கல்வி குழுமங்கள் சார்பாக பள்ளி மாணவ,மாணவிகளிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அத்லெட்டிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. அதன் படி 8 வது மாநில அளவிலான ஜூனியர் தடகள விளையாட்டு போட்டி கோவை நேரு ஸ்டேடிய மைதானத்தில் நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா எஸ்.என்.எஸ்.கல்வி குழமங்களின் தொழில் நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் செந்தூர் பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார். ,சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன்,விஜிலென்ஸ் கண்காணிப்பு குழு உறுப்பினர் சுப்பா சோமு,கோவை அனைத்து விளையாட்டு சங்க தலைவர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு, தடகள சங்க கொடி மற்றும் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெற உள்ள,இந்த போட்டிகளில் சென்னை, மதுரை,கோவை, திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, சேலம், திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட பள்ளியில் பயிலும், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில்,, 100 மீட்டர் முதல் 1500 மீட்டர் வரையிலான ஓட்டப்பந்தயம்,நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல்,குண்டு எறிதல்,வட்டு எறிதல்,தொடர் ஓட்டம். உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
துவக்க விழாவில்,கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் தினகரன், கோவை மாவட்ட அத்லெட்டிக் சங்க செயலாளர் சம்சுதீன், பொருளாளர் ஜான் சிங்கரராயர்,துணை தலைவர் ரத்தினவேலு,தொழில் நுட்ப இயக்குனர் ஸ்ரீனிவாசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.