August 5, 2022 தண்டோரா குழு
இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கோவை மாவட்டத்தில் மின் கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி வரி உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து மாநில இணை பொதுச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் குறித்து மாநில இணை பொதுச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் கூறுகையில்,
மக்கள் அன்றாடம் சாப்பிடும் அரிசியிலும் ஜி.எஸ்.டி வரி புகுந்து விட்டது.இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும், மாநில அரசாங்கம் மின்கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. சொத்து வரியையும் உயர்த்தி உள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து அவற்றிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஐ.ஜே.கே கட்சி
கோவை மாவட்ட மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் குளோரி ஜான்பிரிட்டோ, கோவை மாவட்ட மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் நூர் பாத்திமா,கோவை மாநகர மாவட்டத் தலைவர் வடக்கு மண்டலம்
பி.கே. அந்தோணிசாமி, கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எர்னஸ்ட் ராபின், கோவை மாநகர மாவட்ட தலைவர் முத்துச்செல்வம், மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் முருகேசன் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.