August 6, 2022 தண்டோரா குழு
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் , ரோட்டரி கிளப் ஆஃப் காட்டன் சிட்டி , ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை இணைந்தும் நடத்தும் , தாய்ப்பால் தானம் மற்றும் தாய்ப்பால் புகட்டுவதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி , கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை வகித்தார்.3201 மாவட்ட ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த என்.சுந்தர வடிவேலு முன்னிலை வகித்தார்.கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் ஐ.ஏ.எஸ். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாக்கத்தான் நிகழ்ச்சியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் ” ஒருமுறை தாய்ப்பால் தானம் செய்யுங்கள் ; கொடையாளர்களாக மாறுங்கள் ” மற்றும் ” சிறு சிறு துளிகளால்,துளி துளியாய் இவ்வுலகை மாற்றுவோம்’என்ற முழக்கத்தை பேரணியில் முன்வைத்து நடத்தப்பட்ட வாக்கத்தான் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில்,எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அலுவலர் சி.வி. ராம்குமார்,ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டீன் டாக்டர் சுகுமாரன்,ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் ஆர்.மயில்சாமி, சுமித்குமார் பிரசாத், ராகேஷ்குமார் ரங்கா, நீரவ் சேத், டாக்டர் நீத்திகா பிரபு,கிருஷ்ணா டி.சமந்த் ,ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.