August 6, 2022 தண்டோரா குழு
கோவை கணபதி பகுதியில் உள்ள யூனியன் வங்கி கிளையில், அகில இந்திய சிறு குறு, நடுத்தர கடன் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது, இதில் பல்வேறு தொழில் முனைவோர்கள் எவ்வாறு கடன் பெறுவது என்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டது.
கோவை கணபதி பகுதியில் உள்ள யூனியன் வங்கி கிளையில், அகில இந்திய சிறு, குறு, தொழில் முனைவர்கள், தொழிலை மேம்படுத்த விரும்புவோர், தொழில் துவங்க நினைப்பவர்கள் என, பலரும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் பிராந்திய தலைவர் மற்றும் துணை பொது மேலாளர் ரஞ்சித் சுவாமி நாதன் அனைவர் மத்தியிலும் பேசும் போது,
பெண் தொழில் முனைவோர்களை ஊக்கபடுத்தும் வகையில்,யூனியன் நரிசக்தி,எனும் திட்டம் இயங்கி வருகினறது, இந்த திட்டத்தின் கீழ், பெண்கள் சுய தொழிலில் முன்னேற்றவும் தொழிலை மேம்படுத்தவும், பெண்களின் முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றம், எனவும் இத்திட்டத்தின் கீழ், 2 லட்சத்தில் இருந்து 10 கோடி வரை, கடன் வழங்க படுகின்றது என்றார்.
இதனையடுத்து யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எம்எஸ்எம்இ உதவி பொது மேலாளர், டிகே அபிஜித், கூறும்போது,
கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்த இந்த 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தொழில் முன்னேற்றம், தொழில் விருத்தி, காக, யூனியன் எம்எஸ்எம்இ சுவிதா எனும் திட்டம் உள்ளது, இந்த திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர்கள் தங்களது காலி இடங்களை வங்கிகளில் காட்டினால் மட்டும் போதும் வங்கி, உங்களது நிறுவனத்தின் கட்டுமான பணிகள் முதல், உங்களது நிறுவனத்திற்கு தேவையான அனைத்து இயந்திரங்களையும் வங்கி பெற்று, நிறுவனத்தை இயக்க அனைத்து நடைமுறைகளும் முறைப்படுத்தி உங்களிடம் வழங்கும் இது பொன்று பல்வேறு திட்டங்கள் சிறு குறு வர்த்தங்களுக்கு வங்கியில் கடன் வசதி திட்டங்கள் உள்ளது.
ஆனால் யாரும் அதனை முறையாக பெறுவது இல்லை என்றார்.இதனை சிறு குறு நிறுவனங்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த முகாம் நடத்த பட்டு வருகின்றது.மேலும் இது போன்ற திட்டங்களை நன்கு கேட்டறிந்த சிறுகுறு வர்த்தக நிறுவனங்களின் கடன் தொகைக்காற காசோலைகள் இந்த நிகழ்ச்சியின் வாயிலாகவே அவர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறு குறு வர்த்தக நிறுவனங்களை சார்ந்தவர்களுக்கு இது போன்ற பல்வேறு திட்டங்களை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் முதன்மை மேளாளர் சுரேஷ், அனைவருக்கும் எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.