• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மின்சார கட்டண உயர்வு – சிறு,குறு தொழில் சங்கத்தினர் வேதனை!

August 8, 2022 தண்டோரா குழு

மின்சார கட்டண உயர்வால் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதோடு,இந்த கட்டண உயர்வு தொழில்களும் நலிவடைய செய்வதாக கோவை மாவட்ட சிறு குறு தொழில் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை கொடிசியா அலுவலகத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சிறுகுறு தொழில் சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுது.

அப்போது பேசிய தொழில் சங்கத்தின் கொடிசியா தலைவர் திருஞானம்,

தற்போது மின் கட்டணத்தை 17மடங்கு உயிர்த்தியுள்ளதால் சிறுகுறு தொழில்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், ஒவ்வொரு மாதமும் 17சதவீதம் மின்சார கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தல்லப்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழக அரசு புதிய மின் திட்டத்தை ரத்து செய்து பழைய நடைமுறை மின்சார கட்டணத்தை அமுல்படுத்த வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே போல பீக் ஹவரான 8மணி நேரத்திற்கு தொழிற்சாலைகளுக்கு 25சதவீதம் கூடுதல் மின் கட்டணம் போடபட்டுள்ளதால் சிறுகுறு தொழிற்சாலைகள் கூடுதல் நிதிச்சுமை அடைந்து நஷ்டம் ஏற்படுவதாகவும்,தெரிவித்தனர்.மேலும் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படுவதால், ஏற்கனவே போக்குவரத்து செலவு உள்ளதால்,தற்போது மின் கட்டணமும் அதிகமானால் தங்கள் உற்பத்தி செய்ய கூடிய பொருளின் செலவு மிகவும் அதிகரிப்பதாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் இந்த பொருட்களின் விலை உயர்வால் ,வெளி மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு வாடிக்கையாளர்கள் படையெடுப்படுதாகவும்,இங்கு உள்ள உற்பத்தியாளர்கள் தங்களது ஆர்டர்களை இழக்க நேரிடுவதாக வேதனை தெரிவித்தனர்.

மேலும் படிக்க