August 11, 2022 தண்டோரா குழு
சமுதாயத்தில் பின் தங்கிய மற்றும் ஆதரவற்ற மாணவர்களுக்கு இலவச நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சியிடன் ஸ்காலர்ஷிப் திட்டத்தை ஆகாஷ் பைஜீ துவங்கியது.
தேசிய அளவில் முதன்மையாக விளங்கும் ஆகாஷ் பைஜூஸ், உயர்கல்விக்கான தனியார் பயிற்சியில் மாணவிகளை சேர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறது. அனைவருக்கும் கல்வி மூலம் சமுதாயத்தில் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த 7ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 2ஆயிரம் மாணவர்களுக்கு, குறிப்பாக மாணவிகளுக்கு இலவச நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சி மற்றும் ஸ்காலர்ஷிப்புகளை வழங்குவதற்கான நாடு தழுவிய திட்டமாகும்.
இந்த வெளியீட்டு விழா இன்று இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் 45 இடங்களில் நடைபெற்ற இதில் கோவையிலும் இதன் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.இதன் முக்கிய நிகழ்வானது டெல்லியில் உள்ள ஏரோசிட்டியில் உள்ள ஜேடபிள்யூ மேரியட் ஹோட்டலில் நடந்தது. இதில் தலைவர் ஜே.சி.சௌத்ரி, நிர்வாக இயக்குனர் ஆகாஷ் சௌத்ரி மற்றும் சிஇஓ அபிஷேக் மகேஸ்வரி, ஆகாஷ் பைஜூ’ஸ் மற்றும் மற்ற நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஆன்தி மூலம் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஆகாஷ் பைஜூ’ஸ் இன் பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர். கல்வியில் சாதனை படைத்த முன்னாள் மாணவர்கள் கோப்பைகள் மற்றும் பூங்கொத்து வழங்கி பாராட்டினர்.இந்த திட்டத்தின் படி, அடையாளம் காணப்பட்ட அனைத்து மாணவர்களும் ஆகாஷ் பைஜூவின் தேசிய திறமை வேட்டை தேர்வு – 2022 (ஆன்தி 2022), இன்ஸ்டிட்யூட்டின் முதன்மையான ஸ்காலர்ஷிப் தேர்வில் கலந்துகொள்வார்கள்.
இது நவம்பர் 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் நடைபெற உள்ளது.பயனாளி மாணவர்களை கண்டறிவதற்காக, ஆகாஷ், தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ஜி.ஓ.க்களுடன் கூட்டு சேர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகள் மற்றும் ஒற்றை பெற்றோர் (தாய்) இருக்கும் மாணவர்களை மட்டுமே பரிந்துரைக்கபடுகின்றனர்.
ஆகாஷ் பைஜூ’ஸ் ஆனது 285மேற்பட்ட மையங்களை கொண்ட பான் இந்தியா நெட்வொர்க்கை கொண்டுள்ளது. இது நாட்டிலுள்ள எந்தவொரு பயிற்சி நிறுவனத்திற்கும் இல்லாததாகவும்,
ஒவ்வொரு மையமும் சராசரியாக 9 வகுப்புகளை நடத்துவதாகவும் இந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.