August 12, 2022 தண்டோரா குழு
ஈமு கோழி மோசடி வழக்கு – குற்றம் சாட்டப்பட்ட சி என் செல்வக்குமாருக்கு 5 கோடியே 60 லட்சம் அபராதம் மற்றும் 10 ஆண்டு கடுங்காவல் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த ரோஜா நகர் பகுதியில் CNS ஈமு ஃபாம்ஸ் என்ற பெயரில் கோழிப்பண்ணை நடத்தி வந்த நிலையில், கவர்ச்சிகரமான போலியான விளம்பரங்கள் கொடுத்து, 140 முதலீட்டாளர்களிடமிருந்து 5,56,55.00 ரூபாய் பணத்தை ஏமாற்றிய தொடர்பாக, பாதிக்கப்பட்ட முதலீட்டாளரான சென்னி மலையை சேர்ந்த விஜயகுமார், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார்
செய்தார்.
இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கு கோவை சிறப்பு நீதிமன்றம் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சி என் செல்வகுமாருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 5,60,00,000 அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி தீர்ப்பு வழங்கினார்.