August 15, 2022 தண்டோரா குழு
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநகராட்சி 15 வார்டு பகுதியில் கானக கோவை திட்டத்தின் கீழ் 200 மரக்கன்றுகளை மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து உள்ளிட்டோர் நட்டனர். முன்னதாக வார்டிற்கு உட்பட்ட பல பகுதிகளில் தேசியக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினர்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி 15 வது வார்டு, காந்தி நகர் மேல்நிலைத் தொட்டி அருகில் கானக கோவை திட்டத்தின் கீழ் பசுமை பூங்கா அமைக்கப்பட்டது. இதில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சை முத்து மற்றும் அதிகாரிகள் செந்தில் பாஸ்கர், குமரேசன், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில பொதுச்செயலாளர் எஸ் பச்சைமுத்து கோவை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக் அப்துல் காதர் லயன் மோகன்ராஜ் சின்னு ராமகிருஷ்ணன் செந்தில்குமார் மருதகிரி சதீஷ் கோபால் ரங்கசாமி பழனிசாமி ரகுபதி மற்றும் பொதுமக்கள் 200 மரக்கன்றுகளை நட்டனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் வார்டிற்கு உட்பட்ட பல இடங்களில் தேசியக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து தூய்மைக் காவலர்கள் கவுரவிக்கப்பட்டு அவர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்க பிளாஸ்டிக் டிரம்களை மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து வழங்கினார்.