August 21, 2022 தண்டோரா குழு
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ முன் வர வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
சமுதாயத்தில் போதிய ஆதரவு இல்லாத மாற்றுத்திறனாளிகள் பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர்.அவர்கள் வாழ்க்கையில் நம்மை போல் உயர நாம் அனைவரும் சேர்ந்து உதவ முன்வரவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் சார்பில் ஐ.எஸ். ஆர். மராத்தான் கோவை வ. உ. சி. மைதானத்தில் நடைபெற்றது.
இந்த மராத்தானில் மாற்றுத்திறனாளிகள் உட்பட சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்.10 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த மாரத்தான் போட்டியில் மாற்று திறனாளிகளுக்கு மட்டும் 1 கிலோமீட்டர் தூரம் வரையிலான போட்டியில் வீல் சேரில் சென்று அசத்தினர்.
மாரத்தான் போட்டியின் முடிவில் மாற்றுத்திறனாளிகள் உட்பட நலிவடைந்தோருக்கு கண் கண்ணாடிகள், செவிப்புலன் திறனை மேம்படுத்தும் கருவிகள், செயற்கை கால்கள்,இலவச தையல் மெஷின், மூன்று சக்கர சைக்கிள் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டது.