August 22, 2022
தண்டோரா குழு
டாஸ்மாக் கடையை மாற்ற கோரி கே.என்.ஜி புதூர் பொதுமக்கள் பாதைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை தடாகம் சாலை, கே.என்.ஜி புதூர்- மேட்டுப்பாளையம் சாலையில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை கோரி கே.என்.ஜி புதூத், எம்.ஜி.ஆர் நகர் ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதுபான கடையினால் பொதுமக்கள், பெண்கள், பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும் அதனை அகற்ற வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து பேசிய அவர்கள்,
அரசிற்கு மதுபான கடை முக்கியமா அல்லது மக்களின் நலன் முக்கியமா என கேள்வி எழுப்பினர்.பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்றனர்.