• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நரேய்ன் கார்த்திகேயனின் டிரைவெக்ஸ்சில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி முதலீடு

August 26, 2022 தண்டோரா குழு

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, இரண்டு, மூன்று சக்கர வாகன உற்பத்தியின் முன்னணி வகிக்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், பயன்படுத்தப்பட்ட இரண்டு சக்கர வாகனங்களின் தளமாக திகழும் நரேய்ன் கார்த்திகேயனின் ஸ்டார்ட் அப் நிறுவனமான “டிரைவெக்ஸ்” (என்கார்ஸ் மொபிலிட்டி மில்லேனியம் சொல்யுசன்ஸ் பிரைவேட் லிமிடெட்) சில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார்ஸ் முன் உரிமையாளர்களைக் கொண்ட இருசக்கர வாகனங்கள் சந்தை மாபெரும் வாய்ப்புகளை கொண்டுள்ளதாக கருதுகிறது. ஒழுங்குமுறையில்லாத நிலையில் உள்ள இந்த துறையை ஒரு ஒழுங்கு முறை கட்டமைப்புக்கான மாற்றத்துக்கு வழி வகுக்கும். இதற்கான சந்தை சமீப காலமாக மிக வேகமான வளர்ச்சி பெற்று வருகிறது. புதுமையான மாற்றத்துக்கான தீர்வுகளை தருவதை நோக்கமாக கொண்டுள்ளது டிரைவெக்ஸ் முதலீடு.

இந்தியாவின் முதல் பார்முலா 1 ஏஸ் ரேசிங் டிரைவர் நரேய்ன் கார்த்திகேயன் நிறுவிய டிரைவெக்ஸ், முன்உரிமை இரண்டு சக்கர வாகன மதிப்புச் சங்கிலியில் ஒருங்கிணைந்த முன்மாதிரி திட்டமாக உள்ளது. பல்வேறு பிராண்டுகளில் உள்ள இரண்டு சக்கர முன் உரிமை வாகனங்களை கொள்முதல் செய்வது, அவற்றை பழுதுநீக்கி மாற்றி அமைத்தல், விற்பனை செய்தல் போன்ற திட்டங்களை இது உள்ளடக்கியது. 2020 ஏப்ரல் மாதத்தில் துவங்கப்பட்ட இந்த டிரைவெக்ஸ், இரண்டு சக்கர வாகன சந்தா சந்தையானது, நியாயமான, வளைந்து கொடுக்கும் தன்மையிலான தீர்வுகளை தருகிறது. மிக குறுகிய காலத்தில் ஐந்து நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தநிகழ்ச்சியில் டிரைவெக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான நரேய்ன் கார்த்திகேயன் பேசுகையில்,

“முன் உரிமை கொண்ட இரண்டு சக்கர வாகனங்களின் சந்தை மிக வேகமான மாற்றம் பெற்று வருகிறது. முதல் டிஜிட்டல் வணிகமான டிரைவெக்ஸ், அனைத்து பிராண்ட் வாகனங்களிலும் அலசி ஆராய்ந்து அதன் திறனை தரும் வகையிலான மதிப்பு தொடரை கொண்டுள்ளது.

வெற்றிகரமாக துவக்கப்பட்டுள்ள இந்த மாடல், வரும் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் வலுப்படுத்தப்படும். டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் முதலீடானது, இதன் விரிவாக்கத்துக்கும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவும் உதவியாக இருக்கும்,” என்றார்.

இந்த முதலீட்டு அறிவிப்பை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் சுதர்ஷன்வேணு பேசுகையில்,

“பயன்படுத்தப்பட்ட இரண்டு சக்கர வாகன சந்தை, ஒழுங்குபடுத்தப்படாத சந்தையாக உள்ளது. டிரைவெக்ஸ், குறுகிய காலத்தில் உருவாகி, விரைவாக வழங்குவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. தனித்துமிக்க இந்த தளத்ததை நரேய்ன் மற்றும் அவர்களது குழுவினர் விரைவாக உருவாக்கியுள்ளனர். நம்பிக்கை, உறுதி மற்றும் வெளிப்படையையும் உருவாக்கியுள்ளனர். புதுமையான தீர்வால், தரமான வாகனத்தை வழங்கி, வாடிக்கையாளர்களின் அனுபவத்தை உயர்த்தியுள்ளனர். டிரைவெக்ஸ், அவரது தொலைநோக்கை நிறைவேற்றும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்றார்.

மேலும் படிக்க