August 31, 2022
தண்டோரா குழு
கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் மாநகர ஆயுதப்படை மற்றும் சட்டம் & ஒழுங்கு போலீசாருக்கு கலவர தடுப்பு பயிற்சி நடைபெற்றது.
கோவை மாநகர ஆயுதப்படை, சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கான கலவரத் தடுப்பு கவாத்து பயிற்சி அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.இந்த பயிற்சியில் கலவரத்தில் ஈடுபடுபவர்களை எப்படி தடுப்பது, கலைப்பது போன்ற மாதிரி செய்முறைகள் செய்யப்பட்டது.
மேலும் ஒலிபெருக்கியை கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்துதல், கண்ணீர் புகையை கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்துதல், லத்தியை கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் துப்பாக்கியைக் கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்துதல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இதில் போலீசார் கலவரக்காரரை துப்பாக்கியில் சுடுவது போன்றும் பின்னர் காயமடைந்த அவரை போலீஸ் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்றும் பயிற்சிகள் எடுக்கப்பட்டது.இந்த பயிற்சியில் ஆய்வாளர்கள் ,உதவி ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் காவலர்கள் 196 பேர் பயிற்சி பெற்றனர்.