August 31, 2022 தண்டோரா குழு
தமிழக முதல்வர் ஸ்டாலின், தங்களது தொகுதியில் 10 முக்கிய பிரச்சினைகள் குறித்து தெரிவிக்குமாறு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தனது தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
அதில், 1.கோவை தெற்கு தொகுதி முழுவதும் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக சேதம் அடைந்துள்ளது.அனைத்து சாலைகளையும் உடனடியாக சரி செய்து போக்குவரத்துக்கு உகந்த தார் சாலையாக மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
2 ) ஸ்மார்ட் சிட்டி திட்டதிற்குட்பட்ட பணிகளை விரைந்து முடிக்கப்பட வேண்டும்.
3 ) பெரிய கடை வீதி, ராஜவீதி ரங்கே கவுண்டர் வீதி மற்றும் ஒப்பணக்கார வீதியின் ஒருங்கிணைந்த மல்டி லெவல் பார்க்கிங் வசதி அவசியம் வேண்டியுள்ளது. டி.கே மார்க்கெட்டின் உட்கட்டமைப்பு மற்றும் மல்டி லெவல் பார்க்கிங் வசதியுடன் மேம்படுத்த வேண்டும்.
4 ) உக்கடம் பகுதியில் பிரதான தொழிலாக தங்க நகை பட்டறைகள் உள்ளதால் அவர்களின் மேம்பாட்டுக்காக ஒருங்கிணைந்த தொழில் வளாகம் மற்றும் குடியிருப்பு வசதி செய்யப்பட வேண்டும்.
5.கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவு படுத்த வேண்டும் . இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கலாம்.
6 ) உலகத்தரம் வாய்ந்த பல்லுயிர் தாவரவியல் பூங்கா நகரின் மையப் பகுதியில் உள்ள Everywhere வளாகத்தில் அமைக்கப்பட வேண்டும்.
7 ) நேரு ஸ்டேடியம் உலகத்தரம் வாய்ந்த அரங்கமாக உருவாக்கப்பட வேண்டும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பெயரில் கோயம்புத்தூர் விளையாட்டு அகாடமி நிறுவப்பட வேண்டும்.
8 ) ராம்நகர் பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட வேண்டும்.
9 ) சாய்பாபா காலனி அண்ணா தினசரி மார்க்கெட் இருக்கும் இடத்தில் சேரும் சகதியுமாக உள்ளது. அங்கே துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது மார்க்கெட் முழுவதும் தரைத்தளம் அமைத்து குளிர்சாதன வசதியுடன் நவீனமயமாக்க வேண்டும்.
10)சேத்துமா வாய்க்காலில் மின் மயானம் அமைத்து தரப்பட வேண்டும்.
எனக் குறிப்பிட்டுள்ளார்.