August 31, 2022
தண்டோரா குழு
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் யு.எம்.டி. ராஜா (52). இவர் நகைப்பட்டறை தொழில் செய்து வருகிறார். இவருக்கு மினி கிரியேச்சர்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். தங்கம், வெள்ளி, இரும்பு, மெழுகு என கிடைக்கும் எல்லாவற்றிலும் மில்லி மிட்டர், செண்டி மீட்டர், அடி அளவில் மினி கிரியேச்சர்கள் செய்வார்.
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நாக பாம்பு வடிவில் 2 அடியில் நாக விநாயகர் செய்து அசத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ மஞ்சள் கிளேவில் இந்த 2 அடி நாக விநாயகர் செய்துள்ளேன். விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு இந்த விநாயகரை செய்துள்ளேன்,’’ என்றார்.