September 5, 2022
தண்டோரா குழு
மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் பெய்த கன மழை காரணமாக குன்னூர் கல்லார் ரயில் நிலையங்களுக்கு இடையே மலை ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்ற மலை ரயில் மேற்கொண்டு செல்ல முடியாமல் மீண்டும் மேட்டுப்பாளையம் திருப்பியது.
இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட மலை ரயிலில் 180 சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர் மலைரயில் போக்குவரத்து இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த காரணத்தினால் இன்று பயணம் செய்த 180 பயணிகளுக்கும் பயண சீட்டுக்கான பணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் கொண்டுவரப்பட்டது.
மலை ரயிலில் பயணிக்கலாம் என்று ஆசையாக இருந்த சுற்றுலா பயணிகள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.