September 6, 2022 தண்டோரா குழு
கோவையில் 9 அதிமுக எம்.எல்.ஏ க்கள் தங்கள் தொகுதியின் முக்கிய பிரச்சனைகள் குறித்து மனு அளித்தனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், தங்களது தொகுதியில் 10 முக்கிய பிரச்சினைகள் குறித்து தெரிவிக்குமாறு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் கோவையில் உள்ள 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதியின் 10 முக்கிய பிரச்சினைகள் குறித்து மனு அளித்தனர்.
அதன்படி தொண்டாமுத்தூர் எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன், கடவுண்டம்பாளையம் எம்.எல். ஏ பி.ஆர்.ஜி.அருண் குமார், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ தாமோதரன், சூலூர் எம்எல்ஏ கந்தசாமி, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. செல்வராஜ், பொள்ளாச்சி எம்.எல்.ஏ. ஜெயராமன், வால்பாறை எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி, சிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கே.ஆர்.ஜெயராமன் ஆகிய தங்கள் தொகுதியின் முக்கிய பிரச்சினைகள் குறித்து மனு அளித்தனர்.