September 6, 2022 தண்டோரா குழு
ஓணம் பண்டிகையையொட்டி, கேரளா செல்லும் ரயில்கள் ‘ஹவுஸ்புல்’ ஆகியுள்ளன.வரும், 8ல், ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தினர், ரயில்களில் சொந்த மாநிலத்துக்கு செல்லத் துவங்கியுள்ளனர். காரைக்கால் – எர்ணாகுளம் டீ கார்டன் எக்ஸ்பிரஸ், சென்னை – ஆலப்புழா எக்ஸ்பிரஸ், சென்னை – திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட், ஹைதராபாத் – திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ், புதுடில்லி – திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தினசரி ரயில்கள், ஹிம்சாகர், அகல்யநகரி, கன்னியாகுமரி, ஸ்வர்ணயஜெயந்தி, பாட்னா உள்ளிட்ட வாராந்திர ரயில்களில், டிக்கெட் முன்பதிவு நிறைவு பெற்று, காத்திருப்போர் பட்டியல், 100 முதல், 250ஐ கடந்துள்ளது.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,
‘கொரோனா பரவல் காரணமாக, இரு ஆண்டுகளாக, கேரளாவில் கொண்டாட்டங்கள் இல்லாமல் இருந்தன. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால், ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளது. பணி நிமித்தமாக வெளியூரில் வசிப்பவர்கள், சொந்த ஊருக்கு வருகின்றனர். அதனால், ரயில்கள் ‘ஹவுஸ் புல்’ ஆகியிருக்கின்றன. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஒரு வாரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்’ என்றனர்.