September 8, 2022 தண்டோரா குழு
இயற்கைக்குசேதம் விளைவிக்காத வகையில் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட வைரங்களை தென்னிந்தியாவில் மிகப்பெரிய அளவில் எடுத்துச் சென்று கொண்டிருக்ககூடிய நிறுவனமான வொண்டர் டைமண்ட் அதனுடைய ஏழாவது கிளையை கோவை பெரிய கடை வீதியில் உள்ள எஸ்.வி.டி ஸ்ரீ வாசவி தங்க நகை மாளிகையில் துவங்கியுள்ளது.
வொண்டர்டைமண்ட் பிராண்டினுடைய தயாரிப்புகள் அனைத்துமே100% வைர நகைகள் எனவும், ஒரு வைர நகைக்கு உரிய அத்தனை குணாதிசயங்களும் இந்த நகைகளில் அப்படியே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த புது கிளையை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி நட்சத்திரம் பவித்ரா லட்சுமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராமன்,வொண்டர் டைமண்டின் நிறுவனர் ஐஸ்வர்யா குப்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வொண்டர்டைமண்டினுடைய வைர நகைகளும் எஸ்விடி நிறுவனத்தின் தங்க நகைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த கடை இருக்கும்.மேலும்வொண்டர் டைமண்டினுடைய ஆய்வுக்கூடங்களில் உருவாக்கப்பட்டுள்ள வைரங்கள் இயற்கையான வைரங்களைவிட மூன்றில் ஒரு பகுதி தான் விலை இருக்கும். எனவே வைர நகைகளை வாங்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
எஸ்.வி.டிஸ்ரீ வாசவி தங்க நகை மாளிகை நகைகள் பற்றி திறப்பு விழாவில் நிறுவனத்தார் கூறுகையில்:-
20 ஆண்டுகளுக்கும்மேலாக தங்க நகை உற்பத்தி மற்றும் விற்பனையில் நாங்கள் இருந்து வருகிறோம். பாரம்பரிய மற்றும் சமகால மாடர்ன் டிசைன்களில் நகைகளை வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். தற்போதுசுப நிகழ்வுகளுக்கான காலமாக இருப்பதால், மிக நேர்த்தியான, பெண்கள் மற்றும் குடும்பத்தினர் விரும்பும் வகையில் டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
எங்களுடைய திறப்புவிழா காலத்தில் நகைகள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கவும் உள்ளோம், என்று கூறினர்.