September 8, 2022 தண்டோரா குழு
கோவையின் ஆகாஷ் பைஜூஸைச் சேர்ந்த 464 மாணவர்கள்தேசிய நுழைவுத் தேர்வான நீட் யுஜி 2022 தேர்வில் தேர்ச்சி பெற்று நிறுவனம் மற்றும்
பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் ப்ரித்வின்சிபி கேஎம் அகில இந்திய
தரவரிசைப் பட்டியலில் 270வது இடத்தைப் பெற்றுள்ளார்.
உலகின் கடினமான நுழைவுத் தேர்வாகக் கருதப்படும் நீட் தேர்வில் வெற்றி பெற மாணவர்கள்ஆகாஷ் பைஜூஸில் 2 ஆண்டு வகுப்பறை திட்டத்தில் சேர்ந்தனர்.நீட் தேர்வின் சிறந்தசதவீதம் பெற்றவர்கள் பட்டியலில் அவர்கள் நுழைந்ததற்குக் காரணம், கருத்துகளைப்
புரிந்துகொள்வதில் எடுத்த முயற்சிகள் மற்றும் அவர்களின் கற்றல் அட்டவணையைகண்டிப்பாகப் பின்பற்றியதே ஆகும்.
“கருத்துக்களை புரிந்து கொள்ளவும், கற்றுக் கொடுத்துஎங்களுக்கு உதவியதற்கும் நாங்கள் ஆகாஷ் பைஜூஸ் நிறுவனத்துக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.அதேநேரம் குறுகிய காலத்தில் வெவ்வேறு பாடங்களில் பல கருத்துகளை,நிறுவனத்தின் உள்ளடக்கம் மற்றும் பயிற்சி இல்லாமல் நாங்கள் புரிந்து கொண்டிருக்க மாட்டோம்” என மாணவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களை வாழ்த்திப் பேசிய ஆகாஷ் பைஜூஸ் நிர்வாக இயக்குநர் ஆகாஷ் சவுத்ரி,
“மாணவர்களின் முன்மாதிரியான சாதனையை நாங்கள் வாழ்த்துகிறோம். நீட் 2022 தேர்வில்
நாடு முழுவதும் இருந்து 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்குபெற்றனர். மாணவர்களின் இந்த சாதனை அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின்
பெற்றோர் அவர்களுக்கு அளித்த ஆதரவைக் காட்டுகிறது. மாணவர்களின் எதிர்கால
முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
‘’தொற்று நோயால் பாதிக்கப்பட்ட கல்வி ஆண்டுகளில், நீட்தேர்வில் மாணவர்களை அதிக சதவீத மதிப்பெண் பெற்றவர்களாக மாற்ற ஆகாஷ் பைஜூஸ் கூடுதல் கவனம் செலுத்தியது. எங்கள் மாணவர்களுக்கு எப்போதும் கிடைக்கும் வகையில்
எங்கள் டிஜிட்டல் இருப்பை நாங்கள் தீவிரப்படுத்தினோம். நாங்கள் ஆய்வுப்
பொருட்களையும், கேள்வி வங்கிகளையும் ஆன்லைனில் அணுகும்படி செய்தோம். தேர்வுக்கு
தயாராகும் வகையில் நேர மேலாண்மை திறன்கள் குறித்து பல மெய்நிகர் ஊக்க அமர்வுகள்மற்றும் கருத்தரங்குகளை நடத்தினோம்.
எங்களது முயற்சிகள் பலனளிப்பதை காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்கள் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களில் இருந்து தெரிகிறது.அவர்களில் பலர் தங்கள் விருப்பப்படி முன்னணி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெறுவதற்கான நிலையில் உள்ளனர்” என்றார்.
இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் இளங்கலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் ஆயுஷ் (BAMS,BUMS, BHMS, முதலியன) படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கான தகுதித்
தேர்வாக தேசிய தேர்வு முகமையால் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.