September 10, 2022 தண்டோரா குழு
இன்று உலக முதலுதவி முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் அலெர்ட் என் ஜி ஓ இணைந்து மாபெரும் உலக சாதனையாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் அரசினர் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள், அண்ணா பல்கலைக்கழகம் மாணவ மாணவிகள்,குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள்,குமரகுரு பள்ளி மாணவ மாணவிகள்,குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் என 49 பள்ளி கல்லூரிகளில் இருந்து 5386 மாணவ மாணவிகளுக்கு மயக்கத்தில் இருப்பவரை உடனடியாக மீட்டு வருவதற்கான அடிப்படை முதல் உதவி சிகிச்சைக்கான பயிற்சிகள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டது.
இதனை ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட் பதிவு செய்து விருது வழங்கியுள்ளனர்.மேலும் இதில் போதைபொருளுக்கு எதிரான உறுதி மொழியை, எடுத்தனர்.இந்நிகழ்விற்கு மாணவ மாணவிகளை அழைத்து வருவதற்கு பேருந்து வசதிகள், தேவையான எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுக்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இது கோவை மாவட்டத்தை பொருத்தவரை மிக பெரிய சாதனையாக கருதப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இந்நிகழ்வு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அலெர்ட் என் ஜி ஓ நிர்வாகிகள் வேளாண் பல்கலைக்கழக அலுவலகர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.