September 12, 2022 தண்டோரா குழு
கோவையை இந்தியாவின் பிரதானமான முதலீடு மற்றும் வியாபாரத் தளமாக மாற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு ( சி.ஐ.ஐ ) சார்பில் கோயம்புத்தூர் நெஸ்ட்டு (NXT) திட்டம் துவக்க நிகழ்ச்சி கோவை சின்னியம்பாளையம் பகுதியில் தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
கோயம்புத்தூர் நெஸ்ட்டு மூலம்,நகரத்தின் முக்கிய பங்குதாரர்களுடன் கூட்டாக இணைந்து பணியாற்றி, CII, புதிய நம்பிக்கைகளை விதைக்கவும், வழிகாட்டவும் மற்றும் அவர்களை உலக அளவில் வணிகம் செய்ய தயார் படுத்தவும், உள்ளூர் தொழில்களை வலுப்படுத்தவும் உதவுகிறது.
வித்தியாசமான முறையில், கோயம்புத்தூர் நெஸ்ட்டு ஆனது உலகம் முழுவதிலுமிருந்து முதலீடுகளை ஈர்த்து பாரம்பரிய மற்றும் வளர்ந்து வரும் துறைகள் மற்றும் துடிப்பான ஸ்டார்ட்-அப் சூழலை வளர்ப்பதற்கும் முயற்சி செய்கிறது.
கோயம்புத்தூர் நெஸ்ட்டு,கோயம்புத்தூரின் வளர்ச்சிக்குத் தேவையான மற்றும் சாதகமான கொள்கை நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தின் பங்குதாரர்களை அணுகுவதோடு, கோயம்புத்தூரில் வளர்ந்து வரும் துறைகளில் புதிய முதலீடுகளைப் பெறுவதற்காக முக்கிய பெருநகரங்கள் மற்றும் முக்கிய உலகளாவிய இடங்களிலுள்ள வெளிப்புற பங்குதாரர்களை அணுகும்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி எஸ் சமீரன்,சங்கர் வானவராயர், டாக்டர் எஸ் கே சுந்தரராமன்,டாக்டர் செந்தில் கணேஷ், ஜெயராம் வரதராஜ்,அர்ஜுன் பிரகாஷ், ஜெயக்குமார் ராமதாஸ், பிரசாந்த், ஆர் நந்தினி, ரவி ஷாம்,ரமேஷ் பாபு, ஆகியோர் கலந்து கொண்டனர்.