September 13, 2022
தண்டோரா குழு
கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 3வது முறையாக
இன்று காலை முதல் மாலை வரை
சோதனையில் ஈடுபட்டனர்.
இதனால் அதிமுக தொண்டர்கள் மற்றும் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். இதனைத் தொடர்ந்து
எஸ்.பி வேலுமணி வீட்டின் முன்பு திரண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ. 32.08 லட்சம் ரொக்கம், 1,228 கிராம் தங்கம், 348 கிராம் வெள்ளி மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டன. வழக்கில் தொடர்புடைய 315 ஆவணங்கள், 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.