• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆமை வேகத்தில் பெரியநாயக்கன் பாளையம் மேம்பால பணிகள்

September 14, 2022 தண்டோரா குழு

கோவை அருகே பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் நடைபெறும் மேம்பால பணிகளுக்காக வாகனங்கள் மாற்று பாதையில் மாற்றிவிடப்பட்டுள்ளன.இந்த மாற்று பாதைகளில் வழித்தடம் குறித்த அறிவிப்பு பலகைகள் இல்லாத காரணத்தினால் வழிமாறி சென்று வாகன ஒட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன் பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமி செட்டிபாளையம் பிரிவு வரை 1.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, சுமார் ரூ.115 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், எல். எம். டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து சாமிசெட்டி பாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி, வேகமாக நடந்து தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தூண்கள் அமைக்க தோண்டப்பட்ட சாலைகள் சில இடங்களில் போடப்பட்டுள்ளது. சில இடங்களில் போடப்படாமல் உள்ளது. அதே போல் மேம்பால பணிகளும் அலட்சியமாக நடைபெற்று வருகிறது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாற்றுவழி பாதையும் முன் ஏற்பாடுகள் செய்யப்படாமல் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.மாற்று பாதைகளில் குறுகிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை. சேதமான சாலைகளும் சீர்செய்யப்படவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

‘‘பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகள் தொடர்ந்து அலட்சியாமாக நடைபெற்று வருகிறது. மாற்றுப்பாதைகளில் பல இடங்களில் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. அப்பகுதிகளில் சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் புழுதி காற்று பரக்கிறது. மழை நேரங்களில் குண்டும் குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் அதில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. அதே போல் மாற்று பாதைகளில் வழித்தடம் தொடர்பான அறிவிப்பு பலகைகள் இல்லாததால் வாகன ஒட்டிகள் வழிமாறி செல்கின்றனர். அப்பகுதியில் உள்ள சிறிய தெருக்களுக்குள் வழிமாறி செல்லும் லாரிகள், பேருந்துகள் சிக்கி கொள்கின்றன என்றனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகள் பல்வேறு போக்குவரத்து இடையூறுக்கு மத்தியில் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. தூண்களின் மீது ரேம்ப் வைக்கும் பணிகளின் போது சாலைகள் அடைக்கப்படுகின்றன. சில மணி நேரங்களில் மீண்டும் திறந்து விடப்படுகின்றன. மக்களின் பாதுகாப்பிற்காகவே சாலைகள் அடைக்கப்படுகின்றன. காவல்துறையினரிடம் முன்கூட்டிய தகவலும் தெரிவிக்கப்படுகின்றன. சர்வீஸ் சாலைகள் உடனடியாக போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

எந்த அறிவிப்பும் இல்லாமல் ஏற்பாடும் இல்லாமல் திடீரென அடைக்கப்படும் சாலைகள்:

பெரியநாயக்கன் மேம்பால பணிகளுக்காக வழக்கமாக மக்கள் செல்லும் சாலைகள் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல், மாற்று ஏற்பாடுகளும் இல்லாமல் திடீரென அடைக்கப்படும் சாலைகள். பல மணி நேரம் வாகனங்கள் காத்திருந்து செல்லக்கூடிய அவல நிலை உள்ளது. மேம்பால பணிகள் மேற்கொள்ளும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும் கடைப்பிடிக்கபடுவதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்கள் வழித்தெரியாமல் விடிய விடிய சிக்கிக்கொண்டு காத்திருக்கக்கூடிய அவலநிலையும் உள்ளது என புகார் எழுந்துள்ளது.

ஆட்சியர் உத்தரவு காற்றில் பறந்தது:

பெரியநாயக்கன் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி ஆட்சியர் சமீரன் அன்மையில் தொடர் ஆய்வு மேற்கொண்டும், உயர்மட்ட அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தியும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். கலெக்டரின் அறிவுரையை அடுத்து சிறிது காலம் மேம்பால பணிகள் வேகம் எடுத்தது. அதன் பின் மீண்டும் ஆமை வேகத்திற்கு சென்றது.

மேலும் படிக்க