September 15, 2022
தண்டோரா குழு
கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவின் மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமர ராமசாமி தலைமையிலும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவின் மாநிலச் செயலாளர் வித்திய பிரகாஷ் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஐடி பிரிவின் பார்வையாளர் முரளிதரன் மற்றும் ஐடி கோவை மாவட்ட தலைவர் சதீஷ் மற்றும் அனைத்து ஐடி மாநில, மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.