• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோலிகமுத்தியில் இரண்டு யானைகளை தத்து எடுத்து லீமாரோஸ் மார்ட்டின் !

September 15, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள கோலிகமுத்தி என்ற இடத்தில் மாட்டின் அறக்கட்டளை நிறுவனர் லீமாரோஸ் மார்ட்டின் ஒரு ஆண் யானை வயது 7, ஒரு பெண் யாணை வயது 16, இரண்டு யானைகளையும் தத்து எடுத்து அதற்கு ஒரு வருடத்துக்கு உண்டான செலவுகளையும் ஏற்றுக் கொண்டு அவைகளுக்கு தர்மா அர்ஜுனா, த்ரீலக்ஷா சார்லஸ் என்று பெயர் சூட்டினார்.

அதன்பின் அரசு பலங்குடியினர் குடியிருப்பு நடுநிலை பள்ளிக்கு சென்று 100ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ், பிஸ்கட்ஸ், வழங்கினார். பின்னர் அங்கு வசிக்கும் பழங்குடியின கிராம மக்களுக்கும், யானை பாகன் குடும்பத்திற்கும் புடவைகள், பெட்ஷீட்கள்,மற்றும் தின் பண்டங்கள் வழங்கினார்.

இதனை தொடர்ந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் செல்வன் (ACF – pollachi Range )
காசிலிங்கம் (Forest Ranger)
Rtn.GGR.கவிதா கோபாலகிருஷ்ணன், Rtn. President, வித்யா ரமேஷ் (Rotary Club Of Coimbatore Aakruthi ), Rtn. எர்னஸ்ட் ராபின் (TRF Chair Rotary E Club of Coimbatore Celebrity ) ஆலம் RCC, தர்மா RCC, Rotary Club Of Coimbatore Akruthi உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க