September 15, 2022 தண்டோரா குழு
கோவையில் பவுண்டரி டெவலப்மெண்ட் பவுண்டேஷன் சார்பில் சர்வதேச பவுண்டரி கண்காட்சி கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தொடங்கியது.
கோவையில் பவுண்டரி டெவலப்மெண்ட் பவுண்டேஷன் சார்பில் சர்வதேச பவுண்டரி கண்காட்சி கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் துவங்கியது.இந்த கண்காட்சி வரும் 17 ஆம் தேதி வரை மூன்று நடைபெறுகிறது.இங்கு பவுண்டரி தொடர்பான அனைத்து உபகரணங்களும், பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
சர்வதேச அளவில் இருந்து 180 முன்னணி தொழில் நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கு பெற்றுள்ளன.அதில் 60 நிறுவனங்கள் கோவையிலிருந்து பங்கு பெற்றுள்ளன. மேலும்
ஜெர்மனி, சைனா,செக்கோஸ்லேவியா, ஜப்பான் உள்ளிட்ட மேலை நாடுகளும் கலந்து கொண்டுள்ளன.கண்காட்சியின் துவக்க விழாவில் FDF துணை தலைவர் கிருஷ்ணா சாம்ராஜ் வரவேற்புரை வழங்கினார்.
தலைமை விருந்தினராக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைவர் ஹன்ஸ் ராஜ் வர்மா (ஐ.ஏ.எஸ்) கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில்
FDF தலைவர் வேலுமணி, கண்காட்சியின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பழனிசாமி மற்றும் உறுப்பினர்கள் பலர் துவக்க நிகழ்வில் கலந்து கொண்டனர்.