• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நல்ல சினிமாக்களை கை விட்டுறாதீங்க – கோவையில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு !

September 16, 2022 தண்டோரா குழு

கோவை கே.ஜி திரையரங்கில் விக்ரம் திரைப்படத்தின் 100 வது நாள் கொண்ட்டாட்டம் நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் செண்பக மூர்த்தி, திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருந்தனர்.

நடிகர் கமல்ஹாசனுக்கு சிறப்பு அலங்கார வளைவுகள் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக திரையரங்க ஊழியர்களை நினைவு பரிசுகளை கமல்ஹாசன் வழங்கினார்.

விழா மேடையில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது,

சினிமாவில் நடிக்க ஆரம்பத்தில் என்னை நீதான அந்த புள்ளைன்னு கேட்ட போது மகிழ்ச்சி அளித்தது. ஆனால் ஆரம்ப காலத்தில் நான்கு படங்கள் நடித்தும் என்னை யாரும் கண்டுக்கவில்லை அதை மாற்றவும் உழைத்தேன். சினிமாவில் சாதித்தது எனக்காக மட்டும் என பெருமை பீத்திக்கொள்ள முடியாது. ஒடிடி காலகட்டத்தில் பழைய திரையரங்குகளை மல்டி ப்ளை தியேட்டர்களாக மாற்றி இளைஞர்கள் முன் வந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

மேலும் ஒடிடி குறித்து முன்கூட்டியே சொல்லியிருந்தேன் இப்போது வந்துயிருக்கிறது என்றார். திரையரங்குளில் உணவகம் வரபோகிறது. அமெரிக்காவில் வந்துவிட்டது. உணவகமும் தொழில் தான் சினிமாவின் மவுஸ் இன்னும் குறையவில்லை என்றார்.

வாந்தாரை வாழ வைக்கும் தமிழகம் போன்று சினிமாவும் தான். 63 ஆண்டு காலமாக என்னை வாழ வைத்துள்ளது. நல்ல சினிமாக்களை கை விட்டுறாதீங்க எனவும் நல்ல நடிகர்களை வாழ்த்துங்கள். மக்கள் வாழ்த்தினால் சம்பளம் இரண்டு மடங்கு ஆகும். என்னை மட்டுமல்ல. நல்லா நடிக்கிற நடிகரை வாழ்த்துங்கள் என்றார்.

எங்கள் சினிமா இன்னும் சிறப்பாக இருக்கும். வட இந்தியாவில் பயபடுகிறார்கள், தென் சினிமா பக்கம் அனைவரின் பார்வை திரும்பிவிட்டது. என் குடும்பமும் சினிமாவில் தான் இருக்கு புதிதாக வரக்கூடிய நடிகர்களை உற்று கவனித்து வருகிறேன். என்னிடம் இல்லாததை புதிய நடிகர்களிடம் இருந்து எடுத்துக் கொள்கிறேன். எனக்கு பிடித்த ஊர் கோவை என்றார்.

கோவையில் விக்ரம் க்ளைமேக்ஸ் படம் எடுக்குபோது எனக்கு கோவிட் வந்து விட்டது. ராஜ்கமல் 53 வது படத்தை தயாரித்து வருகிறது. குறைந்த காலக்கட்டத்தில் 100 வது திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் நினைக்கிறேன். அது பேராசை கிடையாது. எனவும் பேன் , ஏசி வந்தவுடன் ஏரி கரையில் நடக்குறோம்ல்ல.. அந்த மாதிரி தான் சினிமா என்றார். சைனாவில் 50 ஆயிரம் சினிமா தியேட்டர்கள் உள்ளது. அதைவிட கூட்டம் இங்கு இருக்கு சினிமா வளர அதை நாம் இங்கு செய்ய வேண்டும் என்றார்.

மேலும் படிக்க