September 17, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
உணவகங்களில் பொதுமக்களாகிய நுகர்வோருக்கு வழங்கப்படும் சேவையின் மீது நுகர்வோரின் விருப்பமின்றி சேவை வரி விதிப்பது, நுகர்வோரின் உரிமைக்கு எதிரானதாகவோ அல்லது முறையற்ற வணிகமாகவோ கருதப்படும். நுகர்வோரின் நலன் காக்கும் வகையில் இவ்வரியானது முற்றிலும் நுகர்வோர் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே வசூலிக்க இயலும்.
எனவே கோவை மாவட்டத்தில் உள்ள உணவக உரிமையாளர்கள் தங்களது உணவகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் சேவை வரியினை வசூலிக்கக் கூடாது. அவ்வாறு சேவை வரி வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பிற்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படும். ஏதேனும் உணவகங்களில் சேவை வரி வசூலிக்கப்பட்டால் பொதுமக்கள் தங்களது புகாரை மனுவாக எழுதியோ அல்லது 0422-2300569 என்ற தொலைபேசி மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.