September 17, 2022 தண்டோரா குழு
விஸ்வபிரம்மா ஜெயந்தி விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என கோவை மாவட்ட விஸ்வபிரம்மா மக்கள் கூட்டமைப்பு ஐங்குலத்தோர் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்ட விஸ்வபிரம்மா மக்கள் கூட்டமைப்பு ஐங்குலத்தோர் சார்பாக ஸ்ரீ விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா கோவில்மேடு பகுதியில் நடைபெற்றது.கூட்டமைப்பின் தலைவர் எஸ்.டி.சிவராமன் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக புளியமரம் திடலில் விஸ்வபிரம்மா கொடியேற்றி, படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து விஸ்வபிரம்மா மக்கள் கூட்டமைப்பு ஐங்குலத்தோர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விஸ்வபிரம்மா ஐங்குலத்தோர் சார்பாக ஏழை எளிய அனைத்து சமுதாய மக்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டது.
தொடர்ந்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை,சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட விஸ்வபிரம்மா மக்கள் கூட்டமைப்பின் ஐங்குலத்தோர் தலைவர் சிவராமன் கூறுகையில்,
விஸ்வபிரம்மா ஜெயந்தி விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்,எங்களது சமுதாய மக்களுக்கு அரசு வேலை,இட ஒதுக்கீடு,அரசு நலத்திட்டங்கள், உள்ளிட்டவை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.