September 19, 2022 தண்டோரா குழு
வேலை வாய்ப்பு, உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வேலை வாய்ப்பு, வீட்டு வசதி, உதவித் தொகை, அரசு வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது திடிரென அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேலும் கையில் பதாகைகளை ஏந்திய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அப்போது பேசிய அவர்கள்:
வேலை வாய்ப்பு வீட்டு வசதியை கோரி பல முறை மனு அளித்து எந்த பயன் இல்லை, வீடுகள் கேட்டும் போராடியும் 4 ஆவது மாடியில் வீடுகளை ஒதுக்குகிறார்கள்.மாற்றுதிறனாளியாக உள்ள எங்களால் எவ்வாறு செல்ல முடியும். மேலும் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அளவிற்கான பயிற்சி பெற சிறப்பு திடல் அமைக்க வேண்டும்,மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கல்வி வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளிகள் தர்ணாவில் ஈடுபட்ட தகவலறிந்து அங்கு நேரில் வந்த ஆட்சியர் சமீரண் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்தவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், 6 பேரை அனைத்து மனுக்களுடன் வந்த நேரில் பார்த்து பேசினார். இந்த மாற்றுத்திறனாளிகள் தர்ணாவில் பெண்கள் உட்பட 75 பேர் பங்கேற்றனர்.