September 20, 2022 தண்டோரா குழு
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ளது பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் இன்று காலை எட்டுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்குள்ள ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அதன் பின்னர் மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பினர். இந்த மாணவிகள் எதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டது என மாநகராட்சி அதிகாரிகள் அந்த பள்ளியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவிகள் அருகில் உள்ள கடைகளில் ஏதாவது தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட்டார்களா அல்லது பள்ளியில் வைக்கப்பட்டுள்ள குடிநீரில் பிரச்சனையா என பல்வேறு கோணங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 8 கும் மேற்பட்ட மேற்பட்ட மாணவிகள் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
அந்த பள்ளிக்கு மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு நடத்தினர். இதனால் அந்த பள்ளியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.