• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடந்த 10 ஆண்டுகளாக டென்னிஸ் பின்னோக்கிச் சென்றுவிட்டது – ரோகன் போபண்ணா பேட்டி !

September 22, 2022 தண்டோரா குழு

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் ரோஹன் போபண்ணா இளம் வீரர்களுடன் கலந்துரையாடினர்,மேலும் அவர்களின் பெற்றோருடன் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார்.

கோவை ராக்ஸ் பள்ளிக்கூடம் தனது மாணவர்களுக்கு 2021 இல் டென்னிஸ் பயிற்சி அளிக்க ரோகன் போபண்ணா டென்னிஸ் அகாடமி (RBTA) உடன் கைகோர்த்தது. பள்ளியில் சுமார் 60 மாணவர்கள் RBTA அகாடமியில் டென்னிஸ் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்த அகாடமி தொடக்கத்திலிருந்தே, ரோஹன் போபண்ணா & குழுவினர் பள்ளியில் இந்த விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளின் உடற்தகுதி மற்றும் டென்னிஸ் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி உலக தரத்தில் சிறப்பு பயிற்சிகளை அளித்துவருகின்றனர்.பயிற்சிகள் அனைத்தும் போபண்ணாவால் கண்காணிக்கப்படுகிறது, மேலும் அவரது அனுபவமிக்க பயிற்சியாளர்கள் குழு இங்கு ஆர்வமுள்ள இளம் வீரர்களை சீர்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது.

போபண்ணா,உங்கள் குழந்தையின் இந்த விளையாட்டின் மீதான ஆர்வத்திற்கு ஊக்கமாக இருக்குமாறு பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்தார்.ஒரு போட்டியில் அவர்கள் ஏன் வெற்றி பெறவில்லை என்று அவர்களிடம் கேட்க வேண்டாம்,மாறாக அந்த போட்டியில் தங்கள் சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர்களை சந்தித்த ரோஹன் போபண்ணா,

“எனது சொந்த ஊரான பெங்களூருவைத் தவிர, கர்நாடகாவிற்கு வெளியே நாங்கள் வந்த முதல் நகரம் கோவை தான் இதுதான். ஒரு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஒரு கட்டமைப்பை வழங்குவதும், பயணம் எதைப் பற்றியது என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளவும் புரிந்துகொள்ளவும் உதவுவதும், அவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்குவதே எங்கள் நோக்கம் என்றார்.

“சிறுவயதில் என்னிடம் இல்லாத ஆர்வமும், உத்வேகமும் இந்த குழந்தைகளிடம் உள்ளது, அவர்கள் விளையாட்டை ஆர்வமுடன் விளையாடுகின்றனர்.இங்கு பயிற்சியானது மூன்று நிலைகளில் தயார்படுத்துகின்றோம். சிவப்பு/ஆரஞ்சு/பச்சை நிற பந்துகளுடன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் தங்கள் திறனை மேம்படுத்தலாம், நுட்பங்களைக் கற்றுக் கொள்ளலாம் மற்றும் கட்டமைக்கப்பட்ட முறையில் வளரலாம்,” என்று அவர் கூறினார்.

“குழந்தைகள் விளையாட்டை ரசிப்பது ஏற்கனவே எங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். குழந்தைகள் மகிழ்ந்து முன்னேறும்போது, ​​பெற்றோர்களும் பயணத்தைப் புரிந்துகொள்கிறார்கள்.எங்கள் அகாடமி கோவையில் உள்ளது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,”என்று அவர் கூறினார்.

“முன்பு இருந்ததை விட இன்று விளையாட்டு வளர்ந்துள்ளது. விளையாட்டின் மூலம் நிறைய தொழில்களை உருவாக்க முடியும். ஒரு முக்கிய விளையாட்டாக இந்தியாவில் டென்னிஸ் வளர்ந்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஒரு வாய்ப்பையும் ஊக்கத்தையும் கொடுக்க வேண்டும்.

இந்தியாவில் இன்று டென்னிஸ் பற்றிப் பேசுகையில்,

கடந்த 10 ஆண்டுகளாக டென்னிஸ் பின்னோக்கிச் சென்றுவிட்டதாகவும், இந்த விளையாட்டை ஆதரிக்க கூட்டமைப்புகளின் உண்மையான அர்ப்பணிப்பு நிச்சயம் தேவை என்றும் கூறினார்.

“கடந்த சில ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஏராளமான ஜூனியர்களை நாங்கள் கொண்டிருந்தோம். இந்த ஆண்டு, நான் அனைத்து கிராண்ட்ஸ்லாம்களிலும் இருந்தேன், மேலும் 1 ஜூனியர் கூட இந்தியாவிலிருந்து வராததைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன், இது மிகவும் வருத்தமான விஷயம்,” என்று அவர் கூறினார். . எங்களிடம் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர் , அவர்கள் முறையான வழிகாட்டுதல் வேண்டும் என்றார்.

மேலும் தனது குழு மூலம் மாணவர்களின் முன்னேற்றத்தை அறிந்துகொள்வேன். ராக்ஸ் பள்ளிக்கூடத்தில் பயிற்சிப் பாடங்களை வழங்கும் அனைத்து பயிற்சியாளர்களும் பயிற்சிபெற்ற அனுபவம் வாய்ந்தவர்கள். கோவை ராக் பள்ளிக்கூடத்திற்கு ஆண்டுக்கு மூன்று முறை வருகை தந்து மாணவர்குக்கு பயிற்சி அளிப்பேன், என்றார்.

மேலும் படிக்க