• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ‘ஃபெஸ்டிவ் பொனான்ஸா’ பிரத்தியேக திட்டம் அறிமுகம்

September 24, 2022 தண்டோரா குழு

பண்டிகை காலத்தின் தொடக்கத்தையொட்டி தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பல்வேறு சலுகைகளை அளிக்கும் வகையில் இன்று ‘விழாக்கால அதிர்ஷ்டம்’ என பொருள்படும் ‘ஃபெஸ்டிவ் பொனான்ஸா’ அறிமுகம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஐசிஐசிஐ வங்கி.

வங்கியின் கடன் ஃமற்றும் பற்று அட்டைகள், இணைய பேங்கிங் வசதி, வாடிக்கையாளர் நிதி மற்றும் அட்டைகள் அற்ற இஎம்ஐ வசதிகளைப் பயன்படுத்தி ரூ.25,000 வரையிலான தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் பலன்களை இதில் வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும். வங்கியின் பற்று மற்றும் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி இஎம்ஐ வடிவிலும் இச்சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

எலக்ட்ரானிக்ஸ் அண்டு கேட்ஜெட்கள், உலகளாவிய ஆடம்பர பிராண்டுகள், ஆடைகள் மற்றும் அணிகலன்கள், மளிகைப்பொருட்கள், ஆட்டோமொபைல், பர்னிச்சர், பயணம் மற்றும் உணவு என்று பல்வேறு பிரிவுகளில் வாடிக்கையாளர்களின் விழாக் கால தேவைகளை எதிர்கொள்ளும் விதமாக கொத்தாகப் பல சலுகைகளை வழங்குகிறது இவ்வங்கி.

பிளிப்கார்ட், அமேசான், மைந்த்ரா, பிக்பாஸ்கெட், பிளிங்கிட், மேக்மைட்ரிப், ஐபோன்14, சாம்சங், அஜியோ, ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, எல்ஜி, டெல், ஸ்விக்கி, ஸொமோடோ, பிசி ஜூவல்லர்ஸ் உட்படப் பல பிரபலமான பிராண்டுகள் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கும் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. கடன்கள் (வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் தங்க நகைக் கடன்) போன்ற வங்கித் திட்டங்களில் கூட சிறப்புச் சலுகைகள் கிடைக்கும்.

இந்த அறிமுகம் குறித்து ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஜா பேசுகையில்,

“ஏராளமான சலுகைகள், பொருட்களை வாங்கும்போது தள்ளுபடிகள், கேஷ்பேக்குகள் உட்பட எங்களது வாடிக்கையாளர்களுக்கு ‘பெஸ்டிவ் பொன்ன்ஸா’வை (விழாக்கால அதிர்ஷ்டத்தை) அறிமுகப்படுத்துவது குறித்து அறிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். பல்வேறு திட்டங்கள், சேவைகளில் முன்னணி பிராண்டுகள் மற்றும் இ-வர்த்தகத் தளங்களுடன் கூட்டுச் செயல்பாட்டை மேற்கொள்கிறோம். மேலும் வீட்டுக் கடன், இருப்பு பரிமாற்றம், சொத்துகள் மீதான கடன், தனிநபர் கடன், வாகன கடன், இருசக்கர வாகன கடன் என்று வங்கி வழங்கும் பல்வேறு திட்டங்களிலும் இந்த விழாக்கால பலன்களை அறிமுகப்படுத்துகிறோம். இந்த சலுகைகள் அனைத்தும் எங்களது வாடிக்கையாளர்களுக்குப் பெருமளவில் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருமென்று நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

வங்கியின் பற்று மற்றும் கடன் அட்டையைப் பயன்படுத்தி பல பிரிவுகளில் கவர்ச்சிகரமான சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கும்போது அட்டை அற்ற இஎம்ஐ மற்றும் ‘கட்டணமில்லா இஎம்ஐ’ போன்றவற்றை பயன்படுத்தியும் இச்சலுகைகளைப் பெறலாம்.

முன்னணி பிராண்ட்கள் மற்றும் இ-வர்த்தக தளங்களில் சலுகைகள்: பிளிப்கார்ட், அமேசான், மிந்த்ரா, டாடா கிளிக் ஏஜியோ லக்ஸ் போன்ற பெரிய இ-வர்த்தக நிறுவனங்களில் ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்கையில் 10 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம்.

உலகளாவிய ஆடம்பர பிராண்ட்கள்: அர்மானி எக்சேஞ்ச், கனாலி, கிளார்க்ஸ், டீசல், ஜியார்ஜியோ அர்மானி, ஹாம்லேஸ், ஹியூகோ பாஸ், ஜிம்மி சூ, கேட் ஸ்பேட், பால் மற்றும் ஷார்க், சத்ய பால், ஸ்டீவ் மேடன், ப்ரூக்ஸ் மற்றும் பிரதர்ஸ் உட்பட பல ஆடம்பர பிராண்ட்களில் கூடுதலாக 10 சதம் கேஷ்பேக் உண்டு.

எலக்ட்ரானிக்ஸ் அண்டு கேட்ஜெட்கள்: எல்ஜி, கேரியர், டெல், யுரேகா ஃபோர்ப்ஸ், ஹெயர், சோனி, வோல்டாஸ், வேர்ல்பூல் உட்பட பல முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பிராண்ட்களில் 10 சதவீதம் வரையில் கேஷ்பேக் உண்டு. ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, விஜய் சேல்ஸிலும் பல கவர்ச்சிகரமான சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

மொபைல் போன்கள்: ஆப்பிளின் ‘ஐபோன் ஃபார் லைப்’ திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.2,497-ல் தொடங்கும் உடனடி இஎம்ஐயில் ஐபோன்14 கிடைக்கும். எம்ஐ, ஒன்ப்ளஸ், ரியல்மி, ஒப்போ, விவோவில் மொபைல் வாங்குகையில் கவர்ச்சிகரமான தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைகளை பெறலாம்.

ஆடைகள் மற்றும் பயன்பாட்டு அணிகலன்கள்: ஷாப்பர்ஸ்டாப், லைஃப்ஸ்டைல், ஏஜியோ, பிளிப்கார்ட் உட்பட பல அணிகலன் பிராண்ட்களில் கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். பிசி ஜூவல்லர்ஸில் குறைந்தபட்சமாக ரூ.50,000 வரையில் வாங்கும்போது ரூ.2,500 கேஷ்பேக்கையும் குறைந்தபட்சமாக ரூ.1,00,000 வரை வாங்குகையில் ரூ.5,000 கேஷ்பேக்கையும் பெறலாம்.

மளிகைப் பொருட்கள்: பிக் பாஸ்கெட், ஸ்விக்கி ,ன்ஸ்டாமார்ட், லிசியஸ், பிளிங்கிட், ஈட் பெட்டர், லில் குட்னெஸ் போன்றவற்றில் மளிகைபொருட்கள் வாங்குகையில் உற்சாகமூட்டும் சலுகைகளை பெறலாம்
பயணம்: மேக்மைட்ரிப், யாத்ரா, க்ளியர்ட்ரிப், ஈஸ்மைட்ரிப், பேடிஎம் பிளைட்ஸ் உட்பட பல முன்னணி பயண தளங்களில் உற்சாகமூட்டும் சலுகைகள் கிடைக்கும்.

உணவு: ஸொமோடோ, ஸ்விக்கி, ஈஸிடைனர் போன்றவற்றில் 20 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.
பொழுதுபோக்கு: சோனிலைவ் ஆண்டு சந்தா பெறுகையில் ஆச்சர்யமூட்டும் சலுகைகள், சினிபோலிஸ் மற்றும் ஐநாக்ஸில் திரைப்பட டிக்கெட்டுகள், உணவு மற்றும் குளிர்பானம் பெறுவதில் தள்ளுபடி உண்டு
மரச்சாமான்கள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள்: பெப்பர்ப்ரை, வெஸ்ட் இஎல்எம், ரிது குமார் உட்பட சில பிராண்ட்களில் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்

கடன்களைப் பெறுவதில் சில உற்சாகமூட்டும் சலுகைகள்:

வீட்டுக் கடன்: முன்னரே அனுமதி பெறப்பட்ட வீட்டுக் கடன் மற்றும் முன்னரே அனுமதி பெறப்பட்ட இருப்பு பரிமாற்றம் ரூ.1,100* செயலாக்க கட்டணத்துடன் கிடைக்கும். வீட்டுக் கடன், இருப்பு பரிமாற்றம், சொத்துகள் மீதான கடன்களுக்கு செயலாக்க கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடியைழூ வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

வாகன கடன்: புதிய கார்களுக்கான கடன்கள் பெறும்போது ‘ஆன் ரோடு’ விலையில் 100 சதவீதம் வரையும், ஏற்கனவே பயன்படுத்திய கார் வாங்கும்போது 8 ஆண்டுகளுக்கு வாகன மதிப்பில் 100 சதவீதம் வரையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

வாடிக்கையாளர் நிதி : ஆப்பிள், ஒன்ப்ளஸ், சாம்சங், சோனி, எல்ஜி, வோல்டாஸ் போன்ற பிரான்ட்களை முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனங்களாகத் திகழும் க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ், பஜாஜ் எலக்ட்ரானிக்ஸ் போன்றவற்றில் கட்டணமில்லா இஎம்ஐ வசதியில் பெறலாம்.

தனிநபர் கடன்: 12 முறை இஎம்ஐ (12 இஎம்ஐகளுக்கு முன்னர் கடனுதவி மூலம் பெற்ற பணத்தை மீண்டும் செலுத்த விரும்பினால் 3 சதவீதம் வசூலிக்கப்படுகிறது) செலுத்தியபிறகு தனிநபர் கடன்களை அடைக்க விரும்பினால் முன்னரே அடைப்பதற்கான கட்டணம் வசூலிக்கப்படாது

டிராக்டர் கடன்: 6 ஆண்டுகள்ழூ வரையில் டிராக்டர் கடன்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும். டிராக்டர் விலையில் 90 சதவீதம் வரை இக்கடன் வழங்கப்படும்.

இரு சக்கர வாகன கடன்: வாடிக்கையாளர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் ஆன் ரோடு விலையில் 100 சதவீதம்* வரையிலும், 1,000 ரூபாய்க்கு 30 ரூபாயை விட குறைவான இஎம்ஐயிலும் கிடைக்கும்

மேலும் படிக்க