• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேட்டுப்பாலையத்தில் இந்து இளைஞர் முன்னணியின் நகரத்தலைவரின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள்

September 27, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காமராஜ் நகரைச்சேர்ந்தவர் ஹரீஷ். இவர் பி எஸ் சி ஐ டி பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இவரின் தந்தை வேல்முருகன் பேருந்தில் நடந்துனராக பணிபுரிந்து வருகிறார். ஹரீஷ் இந்து இளைஞர் முன்னணியின் மேட்டுப்பாளைய நகரத்தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இண்டிகோ காரின் முன்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் கல் வீசி உடைத்துள்ளனர்.இதனையடுத்து காலையில் காரை பார்த்த ஹரீஷ்,இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் காவல் துறையினர், கார் கண்ணாடி உடைந்த பகுதிகளை பார்வையிட்டு, அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க