September 27, 2022 தண்டோரா குழு
GRG மேலாண்மை கல்லூரி, கோயம்புத்தூர், நவக்கரை பஞ்சாயத்தில், அதன் முதல் சமூக சேவை திட்டத்தை 24 செப்டம்பர் 2022 அன்று துவங்கியது. நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக Cognizent அறக்கட்டளையின் இந்தியத் தலைவர் பாலகுமார் தங்கவேலு கலந்து கொண்டார்.
தொடக்க நிகழ்வில் GRG மேலாண்மை கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், நவக்கரை கிராம மக்கள், ‘நம்ம நவக்கரை’ NGO உறுப்பினர்கள் மற்றும் இதர NGO’s கலந்து கொண்டனர். டாக்டர் பி. சதாசிவம்,இயக்குநர், ஜிஆர்ஜிஎஸ்எம்எஸ்,பேராசிரியர் எஸ். பாலசுப்ரமணியன்,இயக்குநர், ஜிஆர்ஜிசிஏஎஸ்,என் எஸ் மகேஷ்வரன், தலைவர்,நம்ம நவக்கரை,கோமதி செந்தில் குமார், பஞ்சாயத்து தலைவர், மாவுத்தம்பதி, டாக்டர் சவிதா நாயர்,டீன்,ஜிஆர்ஜிஎஸ்எம்எஸ் , ஆர் இனிதா ரீனா, திட்டம ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
சமூக சேவை நிகழ்ச்சி திட்டத்தில்,GRG மேலாண்மை கல்லூரி மாணவிகள் கிராமத்தில் மாற்றங்களைக் கொண்டுவர பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சமூக திட்டங்களைச் செயல்படுத்துவர். வனம் மேம்பாட்டுத் திட்டம், நீர்நிலை மேலாண்மை, வேளாண்மை மேம்பாடு, கழிவு மேலாண்மை, சுயஉதவிக்குழு மேம்பாடு மற்றும் பழங்குடிப் பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாடு ஆகிய 6 திட்டங்கள் மாணவிகளால் மேற்கொள்ளப்படும். மாணவ திட்டக் குழுக்கள் கிராமங்கள், விவசாய நிலங்கள் , நீர்நிலைகள், காடு வளர்ப்பு பகுதி – வனம் ,மற்றும் அரசு பழங்குடியினர் பள்ளி ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.