• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்: 53 மனுக்கள் குவிந்தன

September 27, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகர பொறியாளர் அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மேயரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 53 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி,மின்விளக்குகள்,குடிநீர் வசதி, பாதாள சாக்கடை,தொழில்வரி,சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.

இவற்றில் கிழக்கு மண்டலத்தில் 4 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 11 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 8 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் 6 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 16 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 8 மனுக்களும் என மொத்தம் 53 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

இக்கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார் இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மண்டல உதவி கமிஷனர்கள், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க