January 5, 2017 தண்டோரா குழு
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 1௦5 வயது முதியவர் மிதி வண்டியை ஒரு மணி நேரத்தில் 22 ½ கிலோமீட்டர் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.
சாதனைக்கு எப்போதும் வயது இல்லை என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது பிரான்ஸ் நாட்டின் இந்தச் சம்பவம். இந்த சாதனையைப் படைத்தவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மார்ச்சாந்த். இவருடைய வயது 1௦5. முதல் உலகப் போருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர்.
இவர் பிரான்ஸ் நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்து உள்ள தேசிய விளையாட்டு மைதானத்தில் மிதிவண்டியை 22 ½ கிலோமீட்டர் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
அவர் முன்னால் தேசிய குத்துச் சண்டை, தீயணைப்பு மற்றும் தேசிய உடற்பயிற்சி வீரர் ஆவர். ஆண் அழகன் போட்டியில் சாம்பியன் பட்டமும் பெற்றிருக்கிறார். உடற்பயிற்சி மற்றும் உணவு அவருடைய இந்த சாதனைக்கு உதவியாக இருந்தது.
இந்த சாதனை குறித்து செய்தியாளர்களிடம் புதன்கிழமை (ஜனவரி 4) அவர் பேசுகையில், “போட்டியில் இன்னும் 1௦ நிமிடங்கள்தான் உள்ளது என்ற இலக்கை நான் பார்க்கவில்லை. அப்படிப் பார்த்திருந்தால் இன்னும் வேகமாக ஓட்டியிருப்பேன். நிறைய காய்கறி மற்றும் பழங்களைச் சாப்பிட்டுள்ளேன். ஆனால், காபி அதிகம் குடித்தது கிடையாது. இதுவே என்னுடைய இந்த சாதனைக்கு காரணம். ஒரு நாளைக்கு 1௦-12 கிலோமீட்டர் மைதானத்திற்குள் சைக்கிள் ஓட்டுவேன். ஆனால், வெளியில் ஓட்டினால் காய்ச்சல் வரும் என்ற பயத்தால் ஒட்டுவதில்லை” என்றார்.