January 5, 2017
தண்டோரா குழு
பிகார் தலைநகர் பாட்னாவில் நிகழ்ச்சியில் வியாழக்கிழமை கலந்து கொண்ட பிரதமர் மோடி பிகார் முதலமைச்சர் நிதீஷ்குமாரின் முழு மதுவிலக்கு அமலைப் பாராட்டிப் பேசினார்.
இது குறித்து மோடி பேசியதாவது:
முன்னோடியான முழு மதுவிலக்கு சமூகப் பணியை மேற்கொண்டதற்காக முதலமைச்சர் நிதீஷ்குமாருக்கு எனது மனம் திறந்த வாழ்த்துகள். இது அனைத்துக் கட்சிகள் மற்றும் பிரிவினரிடையே ஒத்துழைப்புக்காக நிதீஷ் விடுத்துள்ள அழைப்பாகும்.
அரசு மட்டுமோ அல்லது நிதீஷ்குமார் மட்டுமோ இதனை வெற்றியடையச் செய்யாது, இதற்கு மக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம். எனினும் இத்தகைய மிகப்பெரிய சமூகப் பணியை மேற்கொண்டதற்காக நான் நிதீஷ்குமாரை மனம் திறந்து பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.