September 29, 2022
தண்டோரா குழு
கோவை தடாகம் பகுதியில் வசிக்கும் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை மாவட்டம் தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கந்தசாமி என்பவரது மகன் வெள்ளிங்கிரி(52), என்பவர் குடிபோதையில் கடந்த 01.03.2021 -ஆம் தேதி அதே பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் (25) என்பவரை மரக்கட்டையால் அடித்து கொலை செய்தார்.
இந்த குற்றத்திற்காக தடாகம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரால் வெள்ளிங்கிரி(52) மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்கு கோவை மாவட்டம் கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று எதிரி வெள்ளிங்கிரிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் தமிழரசன் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், அவர்கள் பாராட்டினார்கள்.