• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

September 30, 2022 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பாடத்திட்டத்தில் 2022, மற்றும் 2023 மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது, கல்லூரியின் துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

கோவை வடவள்ளி சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று, இளமறிவியல் துறையில் 2022, மற்றும் 2023ம் ஆண்டு பாடதிட்டத்திற்கான தரவரிசை பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி இன்று வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறும் போது,

தமிழ நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 12 இளமறிவியல் பாடப்பிரிவுகள் பயிற்று விக்க படுகின்றது, 2022ம் கல்வி ஆண்டின் இளமறிவியல் துறையில் மாணவர் சேர்க்கைக்கான இனையதள வழி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து, 28.06.2022 அன்று முதல் 20. 08.2022 வரை வழங்கப்பட்டு வந்தது. இந்த கல்வி ஆண்டில் இளமறிவியல் மாணவர் சேர்கைக்கான மொத்த இடங்கள் 6980 நிறப்ப பட உள்ளது.

அரசு கல்லூரியில் ஒற்றை சாளர கலந்தாய்வு மூலமாக, 2567 இடங்கள் நிறப்ப பட உள்ளது.இணைப்பு கல்லூரியில், அரசு இட ஒதுக்கீடு மூலமாக 2868 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1545 இடங்களும், என மொத்தமாக 4413 இடங்கள் நிறப்ப பட உள்ளது. தொழிறிகல்வி பயின்ற மாணவர்களுக்கு 247 இடங்களும்,மாற்று திறனாளிகளுக்கு 129 இடங்களும்,அரசு பள்ளி மாணவர்களுக்கு 408 இடங்களும்,முன்னாள் இரானுவ வீரர்களின் வாரிசு அடிப்படையில், 20 இடங்களும், விளையாட்டு வீரர்களுக்கு 20 இடங்களும் ஒதுக்கபட்டுள்ளது.

மொத்தமாக 39,489 விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், 15,111 மாணவர்களும், 24,348 மாணவிகளும், விண்ணப்பித்து உள்ளனர், இட ஒதுக்கீட்டின் கீழ் 391 விண்ணப்பங்களும், முன்னால் இராணுவத்தினர் 7773 விண்ணப்பங்களும்,அரசு பள்ளியில் இருந்து, 144 மாணவர்களும்,மாற்று திறனாளிகள் 1849 மாணவர்களும்,தொழிறிகல்வி பிரிவில் 808 மாணவர்களும்,விண்ணப்பம் அளித்துள்ளனர், மொத்த விண்ணப்ப தாரர்களில் 1226 மாணவர்கள் பொதுபிரிவிலும், 13,610 மாணவர்கள் பிற்பட்ட வகுப்பிலும், 11,915 மாணவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் பிரிவில் 794 மாணவர்களும், பட்டியல் இனத்தை சார்ந்த பிரிவில் 10,002 மாணவர்களும், பட்டியல் இனத்தை சார்ந்த அருந்ததியர் பிரிவில், 1346 மாணவர்களும், பழங்குடியினர் பிரிவில், 596 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

6ம்வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை, அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சிறப்பு இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்களின் இஎம்ஐஎஸ் எண்கள் தமிழ்நாடு அரசின் சரிபார்ப்புக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவி்த்தார்.

மேலும் படிக்க