• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எல்ஐசிஎம்எப் மல்டிகேப் நிதி திட்டம் அக்டோபர் 6-ந் தேதி அறிமுகம்

September 30, 2022 தண்டோரா குழு

எல்ஐசிஎம்எப் மல்டிகேப் நிதி திட்டம் என்னும் புதிய திட்டத்தை வரும் அக்டோபர் 6–ந்தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக எல்ஐசி மியூச்சுவல் பண்ட் அறிவித்தது. இந்த நிதியை அனைத்து வகையான தொழில் நிறுவனங்களிலும் எல்ஐசி மியூச்சுவல் பண்ட் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் திரட்டப்படும் நிதியானது 75 சதவீதம் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களிலும் மீதமுள்ள 25 சதவீதத்தை நிதி மேலாளர், ஒழுங்குமுறை அணுகுமுறையைப் பின்பற்றி அவரது விருப்பப்படி சந்தையில் முதலீடு செய்வார் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்தாதாரர்களுக்கு இந்த திட்டம் வரும் அக்டோபர் 6–ந்தேதி வியாழக்கிழமை முதல் அக்டாபர் 20–ந்தேதி வியாழக்கிழமை வரை திறந்திருக்கும். அதனைத் தொடர்ந்து மீண்டும் நவம்பர் 2–ந்தேதி இந்த திட்டம் திறக்கப்படும். இந்தக் காலக்கட்டத்தில் சந்தாதாரர்கள் தாங்கள் விரும்பிய பங்குகளை வாங்கலாம்.
எல்ஐசிஎம்எப் மல்டிகேப் நிதி திட்டம் மூலம் திரட்டப்படும் நிதியானது முன்னணி தொழில் நிறுவனங்கள், வலுவான பெரிய, நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட உள்ளது.

மற்ற நிதி திட்டங்களைக் காட்டிலும் இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், அதன் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மேக்ரோ அடிப்படையிலான மதிப்பீட்டின்படி ஈக்விட்டி ரிஸ்க் பிரீமியம், வட்டி விகிதங்கள் மற்றும் வருவாய் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உலகளாவிய ஒட்டுமொத்த பொருளாதாரம் மற்றும் அரசியல் பார்வைகளுக்கு ஏற்ப இந்த நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். இதன் தனித்துவமிக்க முதலீட்டு கட்டமைப்பானது மேக்ரோ குறிப்புகள் அடிப்படையில் சரிசெய்யப்பட்ட சந்தை மதிப்பீடுகளை கணக்கிடும். இது குறைந்த இறுதி மற்றும் உயர் இறுதி விலைக்கு வருவாய் விகிதத்தைக் கணக்கிட்டு அதன் உகந்த போர்ட்போலியோ -நிலை வருவாய் -வளர்ச்சிக்கு வருவதைக் குறிக்கிறது.

இது குறித்து எல்ஐசி மியூச்சுவல் பண்ட் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராமகிருஷ்ணன் கூறுகையில்,

முறைப்படுத்தப்பட்ட பல்வகை முதலீடு மற்றும் நிதி ஒதுக்கீட்டில் கவனம் ஆகிய இரண்டும் முதலீட்டாளர்கள் விரும்பும் முக்கிய அம்சங்களாகும். எங்களின் இந்த புதிய நிதி திட்டம் அந்த இரண்டையும் பூர்த்தி செய்யும் விதமாக தொழில் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் இதில் திரட்டப்படும் நிதியானது முதலீடு செய்யப்படும். இதன் தனித்துவம் என்னவென்றால், அனைத்து துறைகளிலும் வளர்ந்து வரும் நிறுவனங்களை அடையாளம் கண்டு அவற்றில் முதலீடு செய்யும் என்று தெரிவித்தார்.

இது குறித்து இந்த திட்டத்திற்கான நிதி மேலாளர் யோகேஷ் பாட்டீல் கூறுகையில்,

இந்த நிதி நிறுவனங்களின் தரம் மற்றும் அதன் அளவுகோலுக்கு ஏற்ப சந்தையில் முதலீடு செய்யப்படும். எங்களின் மேக்ரோ அடிப்படையிலான மதிப்பீடு முறையில் நிறுவனங்களின் அனைத்து தன்மைகளையும் முறையாக பரிசீலித்து எங்களின் உள்ளக கட்டமைப்பைப் பயன்படுத்தி கடுமையான மதிப்பீட்டிற்கு ஏற்ப அந்தந்த நிறுவனங்களில் இந்த நிதி முதலீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இந்த எல்ஐசிஎம்எப் மல்டிகேப் நிதி திட்டத்தின் நிதி மேலாளராக யோகேஷ் பாட்டீல் செயல்படுவார் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க