• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செஞ்சிலுவை சங்கம் சார்பாக கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம்

September 30, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணி மேலாண்மை குறித்த நான்கு நாள் பயிற்சி முகாம் துவங்கியது.

உலகின் பல்வேறு நாடுகளில் மக்களின் துயர் நீக்கவும்,மேம்பாட்டுக்காகவும் சாதி,மத,மொழி வேறுபாடுகள் இன்றி, தன்னலமற்ற சேவையையே குறிக்கோளாகக் கொண்டு செஞ்சிலுவை சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கோவை மாவட்டம் சார்பாக கடந்த 12 ஆண்டுகளாக இளையோர் செஞ்சிலுவை சங்கம் வாயிலாக கல்லூரி மாணவ,மாணவிகளுக்கான பேரிடர் கால மீட்பு,அவசர கால முதலுதவி, போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக கோவை குரும்ப பாளையம் ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரியில் நான்கு நாட்கள் நடைபெற உள்ள பேரிடர் கால மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் துவக்க நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கோவை மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் நந்தினி ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இதில்,துணை தலைவர் குமுதா பழனிசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

பேரிடர் கால நேரங்களில் இளம் தலைமுறை மாணவர்கள் விபத்து,இயற்கை சீற்றம் போன்ற இடர்பாடுகளில் பாதிக்கப்பட்டோரை சரியான முதலுதவி அளித்து உயிர் காப்பது, ,சூழ்நிலைகளுக்கு தகுந்தபடி எவ்வாறு செயல்படுவது போன்ற பேரிடர் கால மீட்பு மேலாண்மை குறித்து,ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும்,டெல்டா ஸ்குவாட் கமாண்டிங் அதிகாரியுமான ஈசன் பேசினார்.நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்த பயிற்சி முகாமில், சுமார் 42 கல்லூரிகளில் இருந்து 220 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற உள்ளனர்.

துவக்க நிகழ்ச்சியில் ஆதித்நா கல்வி குழுமங்களின் தலைவர் சுகாமாரன், கோவை மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைமை குழு உறுப்பினர் செல்வராஜன்,செயலாளர் பூங்கோதை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க