October 10, 2022 தண்டோரா குழு
மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் முயற்சியாக கோவை கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்லூரியில் “அஜில்” இன்குபேஷன் மையம் துவக்கம்.இதன் வாயிலாக தொழில் துவங்கும் தொழில்முனைவோர்களுக்கு நிதியுதவி மற்றும் பயிற்சியளிக்க இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்லூரி மற்றும் வி ஃபவுண்டர் சர்க்கிள் இணைந்து- “அஜில்” ஸ்டார்ட்அப் இன்குபேஷன் சென்டரை தொடங்கியுள்ளது,இதற்கான துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில்,வி ஃபவுண்டர் சர்க்கிள் இணை நிறுவனர்கள் தியோ சுரபா, பாவனா பட்நாகர், கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிருவனங்களின் தலைவர் டாக்டர் அசோக் பக்தவத்சலம், அஜில் இன்குபேஷ்ன் மையத்தின் தலைமை செயல் அதிகாரி சிவராகவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் இது குறித்து கூறுகையில்,
நகரத்தில் உள்ள ஸ்டார்ட்அப்களுக்கு உதவி மற்றும் பயிற்சி அளிக்கும் முயற்சியாக இதனை துவங்கியுள்ளதாகவும், சுமார் 10,000 ஸ்டார்ட்அப்களுக்கு உதவும் வகையில், ஒரு முறையான பாடத்திட்டம் மற்றும் திட்டத்தில் ஸ்டார்ட்அப் கட்டமைப்பைப் பற்றிய தொடர்புடைய தகவல்களை சேகரிப்பதை அஜில் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.இதில் ஃபயர்சைட் கான்வர்சேஷன், பூட்கேம்ப்கள், ஹேக்கத்தான்கள்,பிட்ச் புரோகிராம்கள், முதலீட்டாளர் ஸ்டார்ட்அப் மிக்சர்கள், பார்ட்னர் நன்மைகள் மற்றும் ரோட்ஷோக்கள் ஆகியவை அடங்கும்.
தொழில்முனைவோர்களின் பிரச்சனைகளை களைந்து அவர்களுக்கு ஒரு ஊக்கமும், பயிற்சியும் வழிமுறையும் வழங்கும் மையமாக செயல்பட உள்ள இதன் வாயிலாக , கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை வேலை தேடுபவர்களாக மாற்றாமல், வேலை வாய்ப்பை உருவாக்குபவர்களாக உருவாக்க வேண்டும். என்பதே நோக்கம் என தெரிவித்தனர்.