October 11, 2022 தண்டோரா குழு
ஊட்டசத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை மாவட்ட அங்கன்வாடி மைய குழந்தைகள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்களின் வீடுகள் மற்றும் பஞ்சாயத்துகளில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில்,
‘‘கர்ப்பிணிகள், வளரிளம் பெண்களிடையே இரும்பு சத்து குறித்தும், ஊட்டச்சத்து குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இரும்பு சத்து குறைபாடு காரணமாக ரத்த சோகை ஏற்படலாம்.அதனை தடுக்க வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் கீரை வகைகள், முருங்கை மற்றும் சத்து மிகுந்த காய்கறி வகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர்’’ என்றார்.