October 12, 2022 தண்டோரா குழு
உலக மன நல தினத்தை முன்னிட்டு,கோவை சி. எஸ்.ஐ பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உளவியல் கல்வி எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 மற்றும் 11 தேதிகளில் உலக மன நல தினம் கடைபிடிக்கபடுகிறது.இது குறித்த புரிதலை ஏற்படுத்தும் விதமாக,கோவை பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.கல்லூரியின் தலைவர் பேராயர் திமோத்தி ரவீந்தர் வழிகாட்டுதல் படி நடைபெற்ற இதில்,முன்னதாக சமூகப்பணித் துறை சார்பாக எம்.சி.ஏ அரங்கில்,மனித உளவியல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
“உளவியல் கல்வி” என்ற தலைப்பில் நடைபெற்ற இதில்,முதன்மை விருந்தினராக, மருத்துவ உளவியலாளர்,ரவி வர்மன், கலந்து கொண்டு பேசினார்.கல்லூரியின் செயலாளர் ஆயர்.டேவிட் பர்னபாஸ்,முதல்வர் டாக்டர்.ஜெமிமா வின்ஸ்டன், துறைத்தலைவர் .சாம் லவ்லிசன், நிகழ்ச்சிப் பொறுப்பாளர் டாக்டர்.பிரியதர்ஷினி மற்றும் சமூகப் பணித் துறையின் அனைத்து ஆசிரிய, மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை சித்தரிக்கும் விளக்கப்படங்களைக் காண்பிக்கும் வகையில், ‘மனநலப் பொருட்காட்சி 2022’ கண்காட்சியும் உளவியல் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதன் விளைவுகள்” என்ற தலைப்பில் சமூக சேவகர் கனகராஜ் பேச உள்ளது குறிப்பிடதக்கது.