October 13, 2022
தண்டோரா குழு
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் படி கோவை மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தேர்வு நடக்க உள்ளது.
ஆகவே ஆண்கள் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் வருகின்ற 25.10.2022 தேதி என்று மாலை 5.30 மணிக்குள் காந்திபுரம் சி1 காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர் காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் அல்லது பெறாதவர். 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்.
மேலும் தொடர்புக்கு 94981 71293,99423 46806,94981 72525