October 14, 2022 தண்டோரா குழு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாநகர், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், கிழக்கு மண்டலம், வடக்கு மண்டலம், தொண்டாமுத்தூர், மதுக்கரை,பெரியநாயக்கன்பாளையம், சூலூர், தெற்கு கமிட்டியின் நிர்வாகிகள், மாவட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம் ஜீவா இல்லத்தில் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆக்கிரமித்து வன விலங்குகளின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளன. இயற்கை சூழலை அளித்துள்ளன. பெரும் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்தும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அனைத்து இடங்களையும் அரசு கையகப்படுத்தி வனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை, தந்தை பெரியார் திராவிட இயக்கம் உள்ளிட்ட 12 அமைப்புகள் நடத்துகின்ற அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வரும் 16ம் தேதி (நாளை) ஆலாந்துறையில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க செய்வதென முடிவு செய்யப்பட்டது.