• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லீ மெரிடீன் ஹோட்டலில் 75 கிலோ எடையிலான பிளம் கேக் தயாரிக்கும் பணி

October 18, 2022 தண்டோரா குழு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள லீ மெரிடீன் ஹோட்டலில் 75 கிலோ எடையிலான பிளம் கேக் தயாரிக்கும் நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

கிறிஸ்தவர்களின் புனித பணிகையான கிறிஸ்மஸ் பண்டிகை வருகிற டிசம்பர் 25 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.அதில் கேக் என்பது முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியான லீ மெரிடீன் ஹோட்டலில் பிளம் கேக் தயாரிக்கும் நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பிளம் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி அவ்விடுதி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தலைமை செஃப் அகிலேஷ் குமார் தலைமையில் விடுதியின் சமையல் நிபுணர்கள் மற்றும் பல்வேறு மகளிர் அமைப்புகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பங்கேற்றனர்.

முன்னதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேஜையில் முந்திரி,உலர் திராட்சை,அத்திப்பழம்,பாதாம்,வால்நட், மற்றும் உலர் பழ வகைகள் மற்றும் சர்க்கரை ஆகியவை தனித்தனியே வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு திரண்டிருந்த பெண்கள் அந்த உலர் பழங்களின் மீது ரம்,விஸ்கி,பிராந்தி,ஜின்,பீர், ஒயின் என சுமார் மதுபானங்களை ஊற்றி நன்றாக கலந்தனர்.

இந்த கலவை வருகிற 60 நாட்களுக்கு பதப்படுத்தப்பட்டு சுமார் 75 கிலோ எடையிலான கேக் தயாரிக்கப்படும் எனவும் மதுபானங்களில் உலர் பழங்கள் நன்றாக ஊறும் பட்சத்தில் சுவையான பிளம் கேக் தயாராகும் எனவும் அது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது எனவும் தயாரிப்பு பணியில் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் லீ மெரிடின் ஹோட்டல் பொது மேலாளர் ராமச்சந்திரன்,உள்பட ஹோட்டல் நிர்வாக அதிகாரிகள் இருந்தனர்.

மேலும் படிக்க