October 18, 2022
தண்டோரா குழு
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது சாலை போடுவதற்காக ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி
அரசு பேருந்து மேலே மோதி விபத்துக்குள்ளானது.
பொள்ளாச்சியில் இருந்து அரசு பேருந்து வால்பாறை 17″வது கொண்ட ஊசி வளைவில் சென்று கொண்டிருந்த பொழுது சாலை அமைப்பதற்காக ஜல்லி கருங்கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி பழுதாகி நின்றதால் டிரைவர் ஹேண்ட் பிரேக் போட்டுவிட்டு கீழே இறங்கி விட்டார்.
பின்னால் சென்ற அரசு பேருந்து மீது அதிக பாரம் ஏற்றி வந்ததால் டிப்பர் லாரி பின்னோக்கி வந்து அரசு பேருந்து முன் பகுதியில் மோதி நின்றது இதில் அரசு பேருந்து னுடைய கண்ணாடி பலத்த சேதம் அடைந்தன பஸ்ஸில் உள்ள பயணிகள் அலறி அடித்து சத்தம் போட்டு கீழே இறங்கி பார்க்கும் பொழுது அரசு பேருந்து டிரைவர் சீட்டினுள் மாட்டிக் கொண்டார்.
பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு வெளியில் எடுத்தனர் இதன் காரணமாக வால்பாறை பொள்ளாச்சி செல்லும் சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.